வெள்ளி, 9 அக்டோபர், 2020

நாட்டில் க.பொ.த உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு

நாட்டில்  பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு.! உங்கள் விபரங்களை பதிவு செய்ய இணையத்தளம் அறிமுகம்  க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தகவல்களை பெற, கல்வி அமைச்சு ஒரு வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது.
இந்தப் பரீட்சைகளிற்கு தோற்றும் மாணவர்கள், பரீட்சையில் தோற்றுவதற்கு முன்னர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்
 வெளியிடப்பட்ட கேள்வித்தாளை நிரப்ப வேண்டும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.www.info.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் மாணவர்கள் நுழைந்து தமது விபரங்களை பதிவு 
செய்ய முடிவும்.இருப்பினும், இணையத்தளத்தில் பதிவு செய்ய வசதிகள் இல்லாததால் தேவையான தகவல்களை வழங்க முடியாத எந்தவொரு மாணவர்களும், பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பரீட்சை மண்டபங்களிலும் விபரங்களை பதிவு செய்யலாம்.தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் வினாத்தாளை தேர்வு மையங்களுக்கு
 அனுப்பியுள்ளது.
பரீட்சை மையங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள், பிராந்திய மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்களுடன் சேர்ந்து, எந்தவொரு சுகாதார கவலையும் ஏற்பட்டால், அப்பகுதியில் சுகாதார 
அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளைப் பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தியோகபூர்வ இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து தனிப்பட்ட த
கவல்களும் தனிப்பட்டதாகவும் ரகசியமாகவும் இருக்கும். உயர்தரப் பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவர்களும் கோரப்பட்டுள்ள விவரங்களை வழங்க வேண்டும். அதே நேரத்தில் புலமைப்பரிசில் மாணவர்கள் சார்பில், அவர்களின் பெற்றோர்கள் கேள்வித்தாளை நிரப்ப வேண்டும்.ஒரு மாணவர் அல்லது குடும்ப
 உறுப்பினர் ஏதேனும் உடல்நல சிக்கல்களை எதிர்கொண்டால், அந்தந்த நிலைமை குறித்த பிந்திய தகவல்களை மீண்டும் நிரப்ப வேண்டும் என்று கல்வி அமைச்சு மேலும் வலியுறுத்தியது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 29 டிசம்பர், 2018

அமரர் .தம்பு. துரைராஜா 15ம் ஆண்டு நினைவஞ்சலி 29.12.18

மலர்வு .06.06.1926. உதிர்வு .23.01.2016
            திதி -29..12.2018
     யாழ் நவற்கிரி புத்தூர்ரை  பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் மாகக் கொண்ட
அமரர் திரு,தம்பு துரைராஜா அவர்களின் நீங்காத நினைவுடன் பதின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி 29..12.2018..இன்று சனிக்திங்கள்கிழமை
பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே
!கண்ணம்மா!
வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!
காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே
 கண்ணம்மா!
நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்ப
மே!கணணம்மா!
இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
உங்கள் நிழலை நிஜமாக்கி நிலைத்திருக்கும்
.எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
என்றும் உங்கள் பிரிவால் துயருறும்
, பிள்ளைகள், சகோதரர்கள் ,
மைத்துனர்மார்கள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள் புட்ட ப்பிள்ளைகள்
முகவரி -நவற்கிரி .புத்தூர் 
தகவல்
குடும்பத்தினர்.----

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 18 பிப்ரவரி, 2017

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்ஆலய நிழல்படங்கள்…

பிள்ளையார் துணை அடியவர்க்கு அருள் பாலித்துக் கொண்டு இருக்கும் எம் பெருமான் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் வேண்டு வோக்கு வேண்டும் அருள்புரியும் அலைய நிகழ்வும் எம் பெருமான் விற்ரிருக்கும் அலைய.. நிழல்படங்கள் இணைப்புகள்…
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>